தந்தை மகன் உறவு :
தவழும் வயதில் மகனை தோள்களில் போட்டு உப்பு மூட்டை தூக்கி கொண்டு செல்லும் தந்தைகள் அவர்கள் பருவ வயது எட்டிய உடன் அவர்களை தோழனாகத்தான் பார்க்க வேண்டும். இதற்கு பொருள் இருவரும் சேர்ந்து குடிபதிலும் புகை பிடிபதிலும் இல்லை , ஒருவரை ஒருவர் தன வயதுக்கு இணையாக பார்க்க வேண்டும்(Treat urselves equally as friends).அப்போதுதான் உறவு வலிமை பெரும். தந்தையை பழைய பஞ்சாகமாக பார்க்காமல் அனுபவத்தின் ஊன்றுகோலாக மகன் பார்க்க வேண்டும். மகனை அறியாத பிள்ளை என்று நினைக்காமல் மாற்றத்தினை நோக்கி ஓடிகொண்டிருக்கும் உலகத்தின் வழிகாட்டியாக தந்தை பார்க்க வேண்டும்.
தந்தை கோவமாக பேசினாலும் அதில் வெறுப்பு இல்லை, என்னை பற்றிய பயம் தான் இருக்கிறது என்று மகன் புரிந்துகொள்வது. மகன் வெறுப்பைக் காட்டினாலும் , அவன் வேறு ஒரு மனகவலையில் உள்ளான் என்று உணர்ந்து, அதை என்னிடம் சொல் நான் சரி செய்ய உதவுகிறேன் என்று தந்தை முன்வருவது இதில் தான் உள்ளது உறவு.
எப்போதும் கண்டிப்பு மட்டுமோ அல்லது அரவணைப்பு மட்டுமோ நல்லதன்று இரண்டும் சமமாக கலந்து இருத்தல் நலம். தந்தை பட்ட கஷ்டங்களை மகன் பட கூடாது என்று நினைத்து அவனுக்கு அனைத்து வசதிகளையும் தந்து வளர்ப்பது தவறு , ஏனென்றால் தான் பட்ட கஷ்டங்கள் தான் வாழ்கையின் அனுபவ பாடத்தை கற்றுத்தந்துள்ளது . மகனின் வாழ்வில் பின்னல் இருந்து வழி நடத்துவதே சிறந்தது அதை விடுத்து தோளில் தூக்கிக் கொண்டு இறுதி வரை நடக்க நினைத்தால் சோம்பேறித்தனம், மெத்தன போக்கு மட்டுமே எஞ்சி இருக்கும்.
பாச மழைகள் காசு மழை போன்றே அதிகமானால் வேதனையில் முடியும். அணைக்க வேண்டிய நேரத்தில் அணைத்து கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து வளர்ப்பது மகனின் எதிர்காலத்துக்கு உதவும் . சொந்த காலில் நின்று வாழ்க்கையில் வெற்றி பெற எண்ணம் தோன்றும்.அதிகமான பாசம் அரவணைப்பு மகனை ஒட்டுண்ணி ஆக மாற்றும்.சுதந்திரம் தேவையான தருணத்தில் வழங்கப்பட வேண்டும் அது வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள உதாவும் . அதிகபடியான சுதந்திரம் தீய வழிக்கான வாசல் ஆகவே அமையும்.
உறவில் நம்பிக்கை தான் முதல் விதையாக அமைகிறது. மகன் வழியில் வரும் பெருமை மகிழ்ச்சி எப்படி உங்களை சாருமோ அவன் வழியில் வரும் துன்பமும் உங்களையே சாரும்.
கால மாற்றம் நூற்றாண்டு மாற்றம் நமக்கு பாசத்தையும் பண்பையும் குறைத்து கொண்டே செல்கிறது. வரும்காலம் பாசம் பண்பு ஆகிய வார்த்தைகளை அகராதி புத்தகத்தில் மட்டுமே பார்த்து தெரிந்து கொள்ளும்.
இதை மாற்றவேண்டிய கடமை நமக்கு உண்டு. பணம் காய்க்கும் மரமாக மட்டுமே தந்தையை பார்க்காமல் நம்மை வாழ்கை போராட்டத்தை எதிர்கொள்ள தயாராகும் ஆயுதமாக பாருங்கள்.
பணம் சம்பாரிப்பது அடுத்தவர்களை அடக்கி அல்ல்வது இல்லை ஆண்மை தன்னை சார்ந்தவர்களை அரவணைக்கும் தூணாக வலிமையில் இருக்கவேண்டும், அவர்களுடைய துன்பங்களுக்கு உருகும் மெழுகாக இருக்கவேண்டும் அவைகளுடைய கண்ணீரை துடைக்கும் காற்றாக இருக்க வேண்டும்.
இதையே தன மகனுக்கு கற்றுத்தர வேண்டும். பெண்களை தனக்கு சமமான துணையாக பார்க்க உதவ வேண்டும்.பெண்களை மதிக்க சொல்லித்தருவது உங்கள் மனைவியிடம் இருந்து ஆரம்பியுங்கள் அது தான் உங்கள் மகனுக்கு முதல் உதாரணமாக அமையும்.
அனைத்து செயல்களிலும் உங்கள் மகனுக்கு முதல் உதாரணம் முன்னுதாரணம் ஆக இருங்கள். சிறிய சிறிய செயல்களுக்கும் பாராட்டுகள் முதலில் பகிருங்கள் , உங்களுக்கு அற்பமான விஷயங்களாக தோன்றுபவை உங்கள் மகன் வளர்ந்தபின் பெரிய விஷயங்களாக தோன்றும்.
அப்போது அவர்கள் உங்களை புறக்கணிப்பது நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டும் .
பணம் வாழ்க்கைக்கு தேவை அனால் பணத்தை உண்டு வாழ்க்கை இல்லை.
பணம் வாழ்க்கைக்கு தேவை அனால் பணத்தை உண்டு வாழ்க்கை இல்லை.
உங்கள் தள்ளாத பருவத்தில் உங்கள் கைகளை பிடித்து நடக்க உங்கள் மனதுக்கு தனிமையை போக்கி இரண்டு வார்த்தைகள் பேச உங்கள் மகனை இப்போதே தயார்படுத்துங்கள்.
உங்கள் பழைய வாழ்கை நீங்கள் பட்ட துன்பம் முன்னேற பட்ட டிகள் அனைத்தையும் பகிருங்கள் அதன் மூலம் உங்கள் மகன் நீங்கள் பெற்ற அனுபவத்தை உணர்ந்துக் கொள்வான்.
மகன் தந்தையை உதறி தள்ளுவது இரண்டு கருத்துக்களை காண்பிக்கும் :
1. தந்தைக்கு முன்னோடியாக அவருடைய தந்தை அமையவில்லை
ஒரு மகன் தன்னுடைய 5 வயதில் கூறுவது:
என் தந்தை தான் எனக்கு ஹீரோ.
10 வது வயதில் கூறுவது :
எங்க அப்பா நல்லவரு ஆனா அப்போ அப்போ கத்துவாரு
15 வது வயதில் கூறுவது:
அம்மா உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லிவை என் ரூட்ல கிராஸ் பண்றாரு நல்லதில்ல
20 வயதில் கூறுவது:
அம்மா எப்படி மா இந்த ஆள கல்யாணம் பண்ணிகிட்ட
30 வயதில் கூறுவது:
நான் எங்க அப்பா உடன் பேசுவதே இல்லை. எது செஞ்சாலும் தப்பு சொல்லுவாரு
40 வயதில் கூறுவது
எங்க அப்பா கத்திக்கிட்டு இருப்பாரு ஆனா பாவம் நல்லவரு
50 வயதில் கூறுவது:
எவ்ளோ கஷ்டப்பட்டு எங்க அப்பா என்ன வளர்தாரு அவரு தான் எனக்கு எல்லாமே.
உங்கள் மகனிடம் கலந்து பேசுங்கள் !
எப்போதும் கட்டளை இடாதீர்கள் !
மிக அருமை தோழரே...அனைத்து தந்தை மகன் உறவிற்கும் தேவையான ஒரு கட்டுரை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமை
ReplyDeletenandri
ReplyDeleteஅருமை நண்பரே.. நன்றிகள் பல..
ReplyDeleteஅருமை நண்பரே.. நன்றிகள் பல..
ReplyDelete