Wednesday, 1 July 2015

உறவுகள் தொடர்கதை .....

                                       உறவுகள் தொடர்கதை .....

                              தனி மனிதர்களை சமூகக் குழுக்களாக ஒழுங்கு படுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சம் உறவுமுறை ஆகும். ஆரம்பத்தில் இது உயிரியல் மரபுவழியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது. ஒரு மனிதர்கள் பிறக்கும்போதே தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் பல தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. பிள்ளைகள் பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும் ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்ற அதே வேளை வேறு சில மேம்போக்கானவையாக இருக்கின்றன .

 மனிதன் படைத்த அனைத்திலும் சிறந்தது உறவுகள் நம் எண்ணங்கள் ஆசைகள் மகிழ்ச்சி விருப்பங்கள் ஆகிய அனைத்தையும் நாம் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள , ஒருவக்குஒருவர் ஊன்றுகோலாக இருந்து செயல்பட நமக்கு வித்திடுவது உறவு .
ஆனால் இன்று நடைபெறும் சில கசப்பான சம்பவங்களுக்கும் ஆரம்ப தூண்டுதலாக உறவு அமைந்துக்கொண்டு இருக்கிறது . இதற்கு காரணம் சரியான புரிதல் இல்லாமல் போவதுதான் . புரிதலுக்காக நாம் செய்ய வேண்டியது சூழ்நிலையில் நம்மை நிறுத்தி பார்ப்பது , அப்போதுதான் மற்றவருடைய வேதனையை  நம்மால்  உணரமுடியும்.

இப்பொழுது உங்களிடம் நான் பகிரபோவது உறவுகளை எப்படி வலிமையாக்கி கொல்வது என்றுதான் .

                                          




No comments:

Post a Comment