தந்தை மகள் உறவு :
இன்றைய நிலையில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவு அவளுடைய கல்வி மற்றும் தொழில் சார்ந்த முடிவுகளையும், தங்கள் இலக்குகளை அடைய வெற்றி பாதை அமைப்பதையும், வருங்கால வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதையும் தீர்மானிக்கின்றது.இது எவ்வாறு சாத்தியம் ???
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கல்லூரி பெண்களிடம் :
அவர்களுடைய தந்தை , அவர்கள் தீர்மானிக்கும் தொழிலை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது? இதற்கு தந்தையுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தவர்கள் நாங்கள் அவர் சொல்வதை ஏற்றுகொள்வோம் , அதில் நன்மை இருக்கும் என்று கூறினார்கள். தந்தையுடன் நட்பு இல்லாதவர்கள் , நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றிகொள்ளமாட்டோம் என்று பதிலளித்தனர்.
எப்போதும் நம்முடைய எதிர்கால வாழ்க்கையை சந்தர்பத்தால் அல்லது நிர்பந்தத்தால் தேர்வு செய்யக்கூடாது, நம்முடைய மனவிருப்பதால் தேர்வு செய்ய வேண்டும்( Never decide your career based on choice or chance, decide it based on ur dreams and passion.)
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தன் தந்தையுடன் பாதுகாப்பான, ஆதரவான நட்புறவு பாராட்டும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை தாமே தீர்மானித்து அதில் வெற்றி அடைகின்றனர். தனக்கான கல்வி இலக்குகளை அடைவதிலேயே அவர்களுடைய கவனம் முழுவதுமாக ஈர்க்கபடுகிறது . வாழ்வியல் சந்தோஷங்கள், சுகங்கள் அவர்களை பாதிப்பதில்லை. தந்தை இல்லாத (அ ) தந்தை விட்டு சென்ற பெண்களே தன் குடும்பச்சுமையை சுமக்க நேரிடும்போது பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக்கபடுகிறார்கள்.வெளியில் தங்களை தைரியசாலிகளாக காட்டிக்கொண்டு உள்ளே கோழைகளாக வாழ்கின்றனர்.
பாதுகாப்பு உணர்வை பெண்கள் முதலில் தந்தையிடம் எதிர்பார்கிறார்கள். அது எளிதில் கிடைக்கும்போது அவர்களுடைய நாட்டம் வேறு எதிலும் செல்வதில்லை.
தன்னுடைய 20 வயது வரை தந்தையின் ஆதரவு இல்லாமல் வளரும் பெண்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகும்போது அதிகமாக உணர்ச்சிவசப்படுவதோடு எதிர்த்து செயல்படமுடியாத சூழ்நிலை கைதிகளாகவே இருப்பர். இதற்கு மறைமுக காரணம் குறைந்த அளவில் கார்டிசோல்(Cartisol Harmone) சுரப்பது .
பருவம் அடைந்த பெண்கள் நமது சமூக அமைப்பு காரணமாகவே தந்தையிடம் இருந்து விலகி நிற்ப்பார். தாயிடம் மனம்விட்டு பேசும் அவர்களால் தந்தையிடம் அது இயலாது. இதை சரி செய்வது சுலபம்:
எதாவது ஒரு சூழலில் பாதுகாப்புணர்வையும் அரவணைப்பையும் உணரும்போது பெண்கள் தந்தையிடம் ஒட்டிகொள்வர்.
தந்தையிடம் முதலில் அமையும் உறவே கணவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான முன்னோடி ஆக அமையும்.(So, a woman’s early relationship with dad, who is usually the first male object of her love, shapes her conscious and unconscious perceptions of what she can expect and what is acceptable in a romantic partner)
நம்முடைய எதிர்கால உறவுக்கான பாலமாக இது அமையும். நம் வாழ்கையை வடிவமைத்து பார்பதற்கு அழகாக அமைத்து தரும் நம் பெற்றோர்களிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளுதல் மூலம் நாம் வாழ்வில் குறித்த இலக்கை எளிமையாக அடைய முடியும்.
இப்போது நாம் 3 பிரிவுகளில் உறவு மேம்படுத்தலை பாப்போம்:
1. அணுகுதல்
2.அமர்த்திக்கொள்ளுதல்
3. கடமை
- நாம் நம் பிள்ளைகளை சுயசிந்தனை, சுய பரிசோதனை, சுயஅறிவு உடன் அனைத்து செயல்களையும் எதிர் நோக்க கற்றுத்தர வேண்டும், இதன் மூலமே அவர்களுடைய சுய மரியாதை பண்பு வளரும்.
- பெற்றோர் தன்னுடைய பாதுகாப்புக்கு ஒன்று சேர்ந்த அரணாக இருப்பார்கள் என்பதை குழந்தை நம்ப வேண்டும். மகளிடம் அதிகமாக கட்டுப்பாடு விதித்தல் அவளுடைய தனி திறமைகளை புறக்கணித்தல், புது முயற்சியாளுக்கு முட்டுகட்டையாக இருத்தல் ஆகிய செயல்கள் மகளை ஒட்டுண்ணியாகவே வளர்க்கும்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் பாசம் உண்டு அதில் சிறப்பு வாய்ந்தது நாய்க்கு , அதுவே குழந்தை பருவத்தில் இருக்கும் தன் குட்டிகளை தன்னுடைய எஜமான் தொட்டால் கூட கோவம் கொள்ளும் அனால் ஒரு பருவத்திற்கு மேல் தன்னுடைய குட்டிகளை உதறிவிடும் , காரணம் அவர்கள் தாங்களாக யாரையும் சாராமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.இதைவிட வேறு என்ன உதாரணம் கூறிவிட முடியும்.
மகளை மனம் விட்டு பேசவையுங்கள் "

No comments:
Post a Comment