மாமியார் - மருமகள் உறவு :
நமது முன்னோர்கள் பெயர்கள் கண்டறியும்போதே மருமகள்/ மருமகன் என்று சுட்டுகின்றனர். இன்னொரு மகன்/ மகள் என்றே இதற்கு பொருள்.
தான் பெற்று வளர்த்த மகனை தனக்கென்று ஒரே ஆதாரமாக நினைப்பவள் தாய், தன்னை மணந்த கனவுருக்காக தன்னுடைய பெற்றோர், உறவினர், நண்பர்கள், ஊர், படிப்பு, விருப்பங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வருபவள் மனைவி. இதில் மகன் மேல் அதிகமான அன்பு செலுத்துவது யார் என்பதில் தான் சண்டை வருகிறது. 30 வயது வரை மகனுக்கான கடமைகளை செய்த தாய் 30 வயதுக்கு மேல் வருகின்ற மனைவியை செய்யவிட்டு ஆனந்தப்பட வேண்டும். அதில் குறைகள் இருந்தால் எடுத்துரைக்க வேண்டும். மருமகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
மகனும் மருமகளும் இல்லறத்தை நல்லறமாக மாற்ற உதவ வேண்டும்.
கஷ்டப்பட்டு வாழாமல் இஷ்ட்டப்பட்டு வாழ வழிக்காட்ட வேண்டும்.
மகனை தன் கைக்குள்ளே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைகாதீர்கள், அது சாத்தியம் இல்லை. அதனால் உங்கள் மகன் உங்களிடம் நடிக்கத்தான் செய்வான். அதை விடுத்து மருமகளை கைக்குள்ளே போட்டுக்கொள்ள முனைப்புடன் செயல்படுங்கள் அது எளிதானது .
தாய் என்பவள் இறந்தகாலம் மனைவி எதிர்காலம் இதில் இரண்டுமே அவனுக்கு தேவை, இறந்தகாலத்தின் அனுபவம் எதிர்காலத்தின் அரவணைப்பு அவனுடைய இரு கண்கள் போல.
எளிமையாக கூறவேண்டும் என்றால்:
மகனும் மருமகளும் பண்டிகைக்காக துணி வாங்க செல்லும்போது,
மாமியார் மகனை பார்த்து :: "உன் மனைவியின் விருபத்திற்கு ஏற்றவாறு புடவை வாங்கித்தா , செலவை யோசிக்காதே அவளுடைய சந்தோஷத்தை யோசி" என்று கூறுங்கள் .
அது உங்கள் மருமகளையும் உங்களையும் சேர்த்து மகழ்ச்சி ஆக்கும். உங்களுக்கும் சேர்த்து புடவை வாங்கி வருவாள் ;முக்கியமாக முழு மனதோடு வாங்கிவருவாள்.
யாரை எப்படி எங்கே பிடித்தால் வேலை நடக்கும் என்ற வாழ்க்கை சூட்சமத்தை நாம் அறிய வேண்டும்.
குடும்பத்துடைய ஆணிவேராக செயல்படுவது மருமகள். அவளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துதல் மூலமாகவே குடும்பம் என்ற ஆலமரம் தழைக்கும் .
மாமியார் மருமகள் சண்டை வரும்போது அதில் மற்றவர்கள் கருத்து கூறுதல் கூடாது , ஏன் என்றால் அவரவர் கண்ணோட்டம் வேறு மாதிரி இருக்கும் அது சண்டையை தீர்க்காமல் இன்னும் பெரிதாக்கிவிடும்.
இதை அவர்கள் இருவருமே எப்படி தீர்ப்பது ?
1.முதலில் சண்டை ஏற்பட்ட காரணத்தை கண்டறியுங்கள், நடுவுநிலைமை கொண்டு சிந்தியுங்கள்( இதற்க்கு நேரம் இல்லை என்றால் இன்னொருவர் நிலையில் நின்று சிந்தியுங்கள், காரணம் தெளிவாக தெரியும்).
2.உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் " என் குடும்பம் என்னை வில்லியாக, கெட்டவளாக பார்க்க வேண்டுமா?
3.எப்படி சரி செய்வது என்று சிந்தியுங்கள் செயல்படுங்கள்
4. தற்பெருமையை(ஈகோ) மற்றும் பொறாமையை முதலில் விடுங்கள்
நன்றாக புரிந்துகொள்ளுங்கள் இந்த சண்டையில் பாதிக்கப்படுவது நீங்கள் நேசிக்கும் மகன்/கணவர்.
மாமியார் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்::
1. மருமகளை உங்கள் மகளாக பாருங்கள் , உங்களுக்கு கடைசி காலத்தில் கை பிடித்து செல்ல ஒரு துணையாக மாற்றுங்கள்.
2.உங்கள் மகனின் மீது ஆதிக்கம் செலுத்தாதீர்கள், உங்கள் வளர்ப்பு முறையாக இருந்தால் அவன் உங்களை எப்போதும் விட்டுவிடமாட்டன் . நீங்கள் உங்கள் கணவரிடம் எதிர்ப்பார்த்த அன்பைத்தான் உங்கள் மருமகளும் எதிர்ப்பார்ப்பாள் (Encourage your son to build, develop, and define his marriage role. Don’t fight for position by grasping and grabbing for your son’s time and emotions.)
3.மகன் மருமகள் இல்லற வாழ்க்கை வெற்றி அடைந்து அவர்கள் 16 செல்வமும் பெற வேண்டும் என்று வாழ்த்துங்கள்.
4.பிரச்சனை வரும்போது அதை கண்டும் கானமல் இருக்காமல் அதை இன்னும் பெரிதாக்காமல் மனம் விட்டு பேசுங்கள் . உங்களுக்கு ஏற்ப்பட மனகசப்பை பகிருங்கள். தவறை திருத்திக்கொள்ள இதுவே ஆரோக்கியமான வழி. மனதை விட்டு பேசுங்கள் , உரையாடலுக்கு உள்ள சக்தி அதிகம்.
5.மருமகளை புகழ்ந்து பேசுங்கள்; குறை கூறிக்கொண்டே இருக்காதீர்கள்.அவளை மேற்பார்வை இடாதீர்கள்
(“Honor your daughter-in-law in the presence of your son. Compliment your daughter-in-law; never criticize or supervise.”)
6.கேட்கப்படும்போது மட்டுமே உங்கள் அறிவுரை - ஆலோசனைகளை பகிருங்கள்.
7.உங்களை போன்றே உங்கள் மருமகள் இருக்கமுடியாது. அவளுடைய பண்புகளையும் மதியுங்கள்
(“Realize that your daughter-in-law wasn’t raised the same way you raised your son and maybe doesn’t have the same standards you have.
“Do not try to change her into who you would like her to be, A good mother-in-law encourages, accepts, and loves unconditionally.”)
8.உங்கள் மகனிடமும் குறைகள் காணப்படும் அது மனித இயல்பு .
9.அவர்களுடைய எதிர்கால கனவுகள் திட்டங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
10. புரிதல் மிக அவசியம். வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் மருமகளின் வீட்டு வேலைகளை பகிருங்கள் , அது உங்களுக்கும் நேரத்தை செலவு செய்ய உதவும். உங்கள் மகள் வந்தால் அனைத்து வேலைகளையும் அவளை உட்கார வைத்து செய்வீர்களே அது போல. செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு வார்தையாவது கேளுங்கள், மருமகள் மகிழ்ச்சி அடைவாள்.
11.அவர்களை தவறுகள் செய்ய அனுமதியுங்கள் அப்போதுதான் உங்கள் வழிகாட்டுதல் தேவைப்படும்
“Respect the decisions of your son and daughter-in-law, even if you don’t agree with them. Know that if their decision is a mistake, it will be a learning opportunity for them.”
12.நட்புறவு கொள்ளுங்கள், இதில் படித்தவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று இல்லாமல் , உங்கள் அனுபவங்கள், உங்களுடைய மாமியார் கதைகள், உங்கள் ஆரம்பகால் மணவாழ்க்கை, உங்கள் கனவு, உங்கள் தோழிகள் , உங்கள் மகனின் சிறு வயது குரும்புத்தனகள் அனைத்தையும் பகிருங்கள்
(“Spend time alone with your daughter-in-law doing things you both enjoy")
14. உங்கள் மகன் மற்றும் மருமகளிடம் நல்ல உறவு அமைத்துக் கொள்ளுங்கள்.
15. உங்கள் மாமியாரிடம் நீங்கள் பட்ட வேதனைகளை மருமகளும் பட வேண்டும் என்று பழிவாங்க நினைகாதேர்கள்.(Dont try to maintain grudge)
16.மகன் மருமகளிடம் சண்டை போடும்போது அவள் பக்கம் நியாயம் இல்லை என்றாலும் மகன் முன் அவளுக்கு பரிந்து பேசுங்கள், பிறகு தனியாக எடுத்துகூருங்கள்..
இப்போது மருமகள்கள் செய்ய வேண்டியன :
1. உங்கள் மாமியாரிடம் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தின் முன்னேற்ற சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறுங்கள்.(Keep her updated about the social happenings and progress of the society)
2. மாமியாரிடம் உங்கள் கணவரின் சிறு வயது கதைகளை கேட்டு மகிழுங்கள்.
3. உங்கள் பிள்ளைகளை மாமியாரிடம் முழு மனதோடு பார்த்துக்கொள்ள விடுங்கள், ஏன் என்றால் உங்கள் கணவரை அவர்தான் வளர்த்து ஆளாக்கினார்.
4. அவ்வபோது ஒன்றாக கடைகளுக்கு செல்லுங்கள் அது உரையாடல், ஒற்றுமை வளர உதவும்.
5. உங்கள் எதிர்கால திட்டங்களை மாறிவரும் சமூக சூழ்நிலை ஆகியவற்றை விளக்குங்கள்.
6.உங்கள் குழந்தைகளை அவர்களுடன் இருக்கும்போது புகைப்படம் எடுங்கள் அது அவர்களுடைய மனதை சந்தொஷபடுத்தும்.
(What they'd love from you is any photos you snap and videos you take of their child reaching milestones, playing, or simply being adored by family)
7.நேரம் இருக்கும்போது ஒன்றாக கோயில் மற்றும் வெளியூர் பயணம் செல்லுங்கள்.
8. உங்கள் தாயை அவர் முன் பெருமைபடுத்தி பேசாதீர்கள்,உங்கள் தாயைப்போல அவருடைய மகனுக்கு அவரும் ஒரு தாய்.
9.சிறு வயதில் உங்கள் கணவர் எந்த உணவை விரும்பி சாப்பிட்டார் என்று கேட்டறியுங்கள், அதன் செய்முறையும் கேளுங்கள்.
10.அன்னையர் தினம் அவருடைய பிறந்தநாள் ஆகி முக்கிய தினங்களுக்கு வாழ்த்து கூறுங்கள், முடிந்தால் பரிசு பொருட்கள் வாங்கித்தாருங்கள்.
11. உங்களுடைய பிறந்ததினம் திருமண நாளையும் அவருக்கு முன்னரே நினைவூட்டுங்கள்.
12.சில நேரங்களில் பெண்ணைப் பெற்ற தாய்கலுக்கு தங்களின் செல்லமாக வளர்ந்த மகள் இன்னொரு வீட்டுக்கு செல்லும்போது அங்கே துன்பப்படுவளோ அவர்களால் மனவருத்தம் அடைவாளோ என்ற தவறான பயம் எழும்.
அதனால் தவறான அறிவுரைகள் வழிக்கட்டுதலைக் கூறுவார் , அப்போது சிந்தித்து செயல்படவேண்டியது மகளின் கடமை.
தன்னுடைய மகள் வேளைக்கு செல்வதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் மாமியார்க்கு , தன்னுடைய மருமகள் வேளைக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சம்பாரிக்கும் திமிரு என்னை மதிக்கமாட்டாள் என்று சொல்வர்.
தன்னுடைய மகள் தனிக்குடித்தனம் சென்றால் மகளின் சாமர்த்தியம் என்று புகழும் மாமியாருக்கு , தன்னுடைய மருமகள் தனிக்குடித்தனம் செல்வது குடும்பத்தை பிரித்த பேய் என்று கூறுவார்.
தன்னுடைய மகள் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு வேலைக்கும் சென்று வருவதை எண்ணி மனம் வருந்தும் மாமியாருக்கு , மருமகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் என்ற நினைப்பு.
அதேபோல,
அம்மா திட்டினால் குறை கூறினால் அதை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதுக்கு தள்ளும் மருமகள் , மாமியார் சொல்லுவதை மட்டும் நேராக மூளைக்கு தள்ளுகிறாள்.
அம்மாவிடம் தன் மனக்கஷ்டங்களை பகிரும் மருமகள் அதையே மாமியாரிடம் சொல்ல தயக்கம் காட்டுகிறாள்.
அம்மாவுக்கு பொருட்கள் வாங்கும் மகள் மாமியார் ஏதேனும் வாங்கி வர சொன்னால் முனுமுனுகிறாள்.
விட்டுக்கொடுபவர்கள் கெட்டுப்போவதில்லை!
பொதுவாக பெண்கள் தன் தாய்க்கு புடவை நகை வாங்கித் தருவதில் காட்டும் ஆர்வம் ஆசை அதிகம், காரணம் அது அவர்களுக்கு திரும்ப வந்து சேரும் என்று.
மாமியார் வேறு மருமகள் அல்லது மகளுக்கு அதை தந்துவிடுவார் என்ற பயம்.
மாமியார் மகளுக்கு பொருட்கள் வாங்கிதருவதில் காட்டும் ஆர்வம் மருமகளிடம் காட்டுவதில்லை , காரணம் இன்னொரு வீட்டில் இருக்கும் தன்னுடைய மகளுக்கு அங்கே பெருமை சேர வேண்டும் என்ற எண்ணம்.
அது அர்த்தம் அற்றது
மாமியார் மருமகள் இடையே மனகசப்பு பொறாமை இல்லாமல் அமையும் உறவு என்றும் நிலத்து இருக்கும். அதை யாராலும் பிரிக்க முடியாது , அதற்கு முதலில் தன தாயை போலவே மாமியாரையும் சமம் படுத்துதல், மகளை போலவே மருமகளை சமன்படுத்துதல் .
இருவரும் புரிந்துக்கொள்ள வேண்டியது ஈசன் தலையில் இடம்பிடித்த கங்கை ஈசனின் மெய்யில் சரிபாதியான சக்தி போல மகனுக்கு தாயும் மனைவியும் அமைய வேண்டும்.
மாமியார் மருமகள் உறவு ஒரு மெல்லிய கயிறு போன்றது அதை இரு முனைகளை நீங்கள் இருவர் பிடித்துக்கொண்டு இருகிறீர்கள்.அதை இழுத்து அருந்துபோகாமல் ஒருவர் இழுக்கும்போது ஒருவர் விட்டுகொடுத்து சென்றால் எப்போதும் கயிறு என்ற மகன் உங்களுடன் இருப்பான்.

Casinos Near Harrisburg - Mapyro
ReplyDeleteCasinos 영주 출장마사지 Near 수원 출장안마 Harrisburg, ME by Phone (866) 226-4746, Nearby Casinos 영주 출장샵 with Mapyro® A map showing casinos and other gaming 오산 출장안마 facilities located near the 김천 출장안마 Harrisburg